ANNAI CHARITABLE TRUST(ACT) “MY GRACE IS SUFFICIENT FOR YOU” 2 Cor. 12: 9 +91 95515 87701,+91 9940392816 amlananthi@yahoo.com |
|
HISTORY வரலாறு
VISION தூரநோக்கு
MISSION பணி
தனி மனித மனங்களில் உறங்கிக் கிடக்கும் ஆன்மீகப் பலத்தையும், மனப்பலத்தையும் தட்டியெழுப்பி, நலமான மனத்தோடு வாழ்க்கை நெருக்கடிககைச் சமாளிக்க மக்களோடு கைகோர்த்து நிற்போம்........... கை கொடுப்போம்........... கைதூக்கி விடுவோம்.........
MOTTO விருதுவாக்கு செயற்பாடுகளில் மனதை ஒருநிலைப்படுத்தி அவை மக்களுக்கு உகந்ததாயிருக்க படைத்த பரம்பொருளின் அருளோடு புது உலகம் படைப்போம்.
AIM நோக்கம்
நலமான மனதை உருவாக்கல்
NATURE இயல்பு இந்த அறக்கட்டளையானது பரந்த நோக்கு உள்ளதும் ஆதாயம் தேடாததுமாகும். எனவே இதுதான் எம்பணி என்று குறுகிய வட்டத்தினுள் நிற்பது எமது நோக்கமல்ல. மக்களின் உடனடித் தேவைகளை முன்வைத்து எம்பணிகள் பரந்துபட்டு எல்லா வழிகளிலும் விரிவடைய வேண்டுமென விரும்புகிறோம். இலக்குகள் பலவாக இருப்பினும் அவற்றை ஒவ்வொன்றாக நனவாக்க முயல்வோம்.
உள்ளத்தின்
தூண்டுதல்கள்
1. அன்னை
ஆற்றுப்படுத்தல் மையம்
3. அன்னை இறுதிப்பயண தயாரிப்பகம்
வாழ்வின்
சுமைகளால், நெருக்கீடுகளால் சோர்ந்து போயிருக்கும் தனிநபர்,
குடும்பங்கள், குழுக்களுக்கு ஆற்றுப்படுத்தல் மூலம் உளச்சோர்விலிருந்து விடுபட உதவிசெய்தல்.
உள இறுக்கங்களிலிருந்து விடுபட, ஓய்வு நேரங்களை மகிழ்வாகச் செலவிட,
ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள உதவியாகவும் இருக்கும்
1. அன்னை ஆற்றுப்படுத்தல் பயிற்சி மையம் 2. அன்னை ஆற்றுப்படுத்தல் பயிற்சி மையம் 3. அன்னை குடும்ப ஆற்றுப்படுத்தல் 4. அன்னை மாணவர்கள் ஆற்றுப்படுத்தல் 5. அன்னை குழந்தைகள் ஆற்றுப்படுத்தல் 6. அன்னை முதியோர் ஆற்றுப்படுத்தல் 7. அன்னை கர்ப்பிணி அன்னையர் ஆற்றுப்படுத்தல்
8. அன்னை
நோயாளர் ஆற்றுப்படுத்தல்
01. அன்னை ஆற்றுப்படுத்தல் பயிற்சி மையம் ஆற்றுப்படுத்தல் என்பது ஒரு கலை. என்னுள் ஏதோ நடக்கிறது, என்னவென்று தெரியவில்லை தலையைச் சுவரில் மோதிக் கொள்வோர் பலர். உன்னை நீ அறிந்து கொள்ள ... மற்றவரை நீ புரிந்து கொள்ள .... உன்னை நீ ஆற்றுப்படுத்த ..... மற்றவரை நீ ஆற்றுப்படுத்த .... உதவியாக ஆற்றுப்படுத்தல்களும், ஆற்றுப்படுத்தல் வகுப்புகளும்.
02.அன்னை ஆற்றுப்படுத்தல் பயிற்சி மையம் ஓவ்வொருவர் வாழ்விலும் வெளியில் சொல்ல முடியாது ஏதோவொரு பிரச்சனை. மனதில் மறைந்து கிடக்கும் பிரச்சனைகள், உண்மைகள், குற்றஉணர்வுகளை யாரிடமும் சொல்லித் தீர்வுகாண முடியவில்லையே! தவிப்போர் பலர். உங்கள் தவிப்புகளிலிருந்து விடுபட உதவிகள் வழங்கப்படுகிறது. உளப்போராட்டங்களை மனம் திறந்துபேச, போராட்டங்கள், மனச்சோர்வுகளிலிருந்து விடுபட, விடுபடும் வழி வகைகளை கண்டுகொள்ள உளநல ஆலோசனைகள் வழங்கப்படும்.
03. அன்னை குடும்ப ஆற்றுப்படுத்தல்
குடும்பத்தில்
கணவன், மனைவிக்கிடையில் பிரச்சனை. குழந்தைகள் வாழ்வு சீரழிகின்றது.
மணமுறிவுதான் தீர்வா? குடும்பத்தின் குறைகள் நீக்க அன்னை குடும்ப
ஆற்றுப்படுத்தல் மையம் உதவுகிறது. 04. அன்னை மாணவர்கள் ஆற்றுப்படுத்தல்
படிக்க
முடியவில்லை, படித்தது மனதில் நிலைப்பதாயில்லை, மனதை
ஒருநிலைப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்த உதவிகள் வழங்கப்படுகிறது.
குழந்தைப்
பருவ அனுபவங்கள் ஆழமன மனப்பதிவுகளை உருவாக்கக்கூடியது. பெற்றோர்,
உறவினர், ஆசிரியர், நண்பர் போன்றோரிடமிருந்து பெறும் நேர்மறை
அனுபவங்கள் எப்படி ஒருவரை உருவாக்கக் கூடியதோ அதேபோன்று குழந்தைக்
கால எதிர்மறை அனுபவங்கள் அவர்கள் வாழ்வை பாதிக்கக் கூடியது.
இப்படிப்பட்ட அனுபவங்களினால் ஏற்பட்ட பாதிப்பான உணர்வுகளிலிருந்து
விடுபட உதவிகள் அளிக்கப்படுகிறது. வாழ்க்கைக் காலம் முடிந்து விட்டது. எம்மை எவரும் கவனிப்பதாயில்லை. வயதாகி விட்டதால் எதையும் சாதிக்க முடியவில்லை. இக்கடைசிக் காலத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. காலம் மிகக் கொடுமையாயுள்ளதே என ஏங்கும் முதியோருக்கு ஆறுதலும், எஞ்சிய காலத்தைப் பயனுள்ள விதத்தில் செலவிட உதவிகள் வழங்கப்படுகிறது.
கருத்தாங்கி இருக்கும் வேளை ஏற்படக் கூடிய மன அழுத்தங்கள், பிரச்சனைகள் தாயை மட்டுமல்ல கருவிலிருக்கும் சேயையும் பாதிக்கக் கூடியது பாதிப்புகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க உதவிகள் அளிக்கப்படுகிறது.
உள்ளம் என்பது பரந்து விரிந்து கிடக்கும் ஒரு தனி உலகம்!
|
|